Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஐஸ்கிரீமில் சர்க்கரைக்குப் பதிலாக பிராஸீன் - ஆய்வு சொல்வது என்ன?

ஐஸ்கிரீமில் சர்க்கரைக்குப் பதிலாக பிராஸீன் - ஆய்வு சொல்வது என்ன?

மேற்கு ஆப்பிரிக்காவில் வளரும் ‘ஔப்ளி’ (Oubli) தாவரத்தில் இயற்கையாகக் காணப்படும் இந்தப் புரதம், சாதாரண சர்க்கரையைவிடப் பல நூறு மடங்கு இனிப்பானது

பகிரவும் WhatsApp Facebook

ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடுமோ என்ற கவலை நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டு. இந்தக் கவலையைக் குறைக்க உதவும் புதிய வழியாக, இயற்கையான இனிப்புப் புரதமான ‘பிராஸீன்’ (Brazzein) இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்க்கரைக்குப் பதிலாக இதைப் பயன்படுத்திய ஐஸ்கிரீம் சாப்பிட்டவர்களுக்கு, உணவுக்குப் பிறகு ரத்தச் சர்க்கரை அதிகரிப்பு குறைவாக இருந்தது.

மேற்கு ஆப்பிரிக்காவில் வளரும் ‘ஔப்ளி’ (Oubli) தாவரத்தில் இயற்கையாகக் காணப்படும் இந்தப் புரதம், சாதாரண சர்க்கரையைவிடப் பல நூறு மடங்கு இனிப்பானது. தற்போது நொதித்தல் தொழில்நுட்பம் மூலமாகவும் இது தயாரிக்கப்படுகிறது. குறைந்த அளவிலேயே அதிக இனிப்பைத் தருவதால், உணவுப் பொருள்களில் சர்க்கரைக்குப் மாற்றாக இதைப் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ரஷ்யாவின் ஊட்டச்சத்து, உயிரித் தொழில்நுட்பம் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான மத்திய ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கொழுப்புக் கல்லீரல் பாதிப்புள்ள 101 பேரிடம் இந்த ஆய்வை நடத்தினர். அவர்கள் மூன்று வெவ்வேறு நாட்களில் தலா 100 கிராம் வெண்ணிலா ஐஸ்கிரீமைச் சாப்பிட்டனர். முதலாவது ஐஸ்கிரீமில் வழக்கமான சர்க்கரையும், இரண்டாவதில் பிராஸீனும், மூன்றாவதில் பிராஸீனுடன் இனுலின் எனும் நார்ச்சத்தும் சேர்க்கப்பட்டிருந்தன.

இதன் முடிவில், வழக்கமான சர்க்கரை சேர்க்கப்பட்ட ஐஸ்கிரீமைச் சாப்பிட்டவர்களுடன் ஒப்பிடும்போது, பிராஸீன் சேர்க்கப்பட்ட ஐஸ்கிரீமைச் சாப்பிட்டவர்களுக்கு உணவுக்குப் பிந்தைய ரத்தச் சர்க்கரை உயர்வு குறைவாக இருந்தது. இந்த மாற்றம் குறிப்பாக இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளிடம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. பிராஸீனுடன் இனுலின் சேர்த்தபோதும் இதேபோன்ற பலன் கிடைத்தது.

இந்த ஆய்வு ‘கிளினிக்கல் நியூட்ரிஷன் இஎஸ்பென்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், இது குறுகிய கால ஆய்வு என்பதால், நீண்டகாலப் பயன்பாட்டால் நீரிழிவு கட்டுப்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மேலும் ஆய்வுகள் தேவை. பிராஸீன் சேர்க்கப்பட்ட உணவுகள் நீரிழிவு சிகிச்சைக்கு மாற்றாகாது என்றும், இந்த ஆய்வு முடிவுகளை அனைத்து உணவுகளுக்கும் பொதுவாகக் கருத முடியாது என்றும் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகள் உணர்த்துகின்றன.

முந்தைய செய்தி
சூடானில் வான்வழித் தாக்குதல்; 72 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழப்பு
அடுத்த செய்தி
PC Jeweller பங்குகள் தொடர்ந்து உயர்வு

தொடர்புடைய செய்திகள்